Orange alert for 5 districts- கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Orange alert for 5 districts- கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை
X

Orange alert for 5 districts- கேரளாவில், 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக, ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Orange alert for 5 districts- கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Orange alert for 5 districts, Kerala- காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கேரளம் கனமழையை சந்தித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை;

திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால், இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை மிக கனமழை பெய்யக் கூடும் என்பதை உணர்த்துவதற்காக கொடுக்கப்படுகிறது. 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்யக் கூடும். மஞ்சள் எச்சரிக்கையின்போது 6 முதல் 11 செ.மீ வரை மழை பெய்யக்கூடும்.

எனவே, மழை நேரங்களில் கேரளாவில் உள்ள மக்கள், எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா