வயது 17 ஆகி விட்டதா? வாக்காளர் அடையாள அட்டைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் அடையாள அட்டை மாதிரி படங்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் முதலிடத்தில் நமது இந்திய திருநாடு உள்ளது. நமது நாட்டை மத்தியிலும் சரி, மாநிலத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆள்வதற்கு தேர்தல் மூலமே மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான முக்கிய ஆவணம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.
வாக்காளர் பட்டியலில் பெயரும், வாக்காளர் அடையாள அட்டையும் இருந்தால் ஒரு இந்திய குடிமகன் தனது வாக்கினை ஜனநாயக தேர்தல் திருவிழாவின் போது பதிவு செய்ய முடியும். தற்போது உள்ள தேர்தல் விதிமுறைப்படி 18 வயது பூர்த்தியானவர்கள் தான் வாக்களிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை உரிய ஆவணங்களை காட்டி பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இனி மேல் 18வயது வரை காத்திருக்காமல் 17 வயது நிரம்பிய உடனேயே வாக்காளராக தனது பெயரை பதிவு செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்யலாம் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பான ஆணையை அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும், அது தொடர்பான அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அனுப்பி வைத்துள்ளார். 17 வயதிலேயே விண்ணப்பம் செய்தாலும் 18 வயது பூர்த்தியான பின்னர் தான் அவர்கள் வாக்களிக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu