H3N2 வைரஸ் பரவல் : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..

Puducherry School News
X

Puducherry School News

Puducherry School News-H3N2 வைரஸ் பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் மார்ச் 16-26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

Puducherry School News-கொரோனா போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் H3N2 எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. ஹரியானாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என நாட்டில் இதுவரை 2 பேர் இந்த காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் ஜனவரி மாதம் முதல் பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. மார்ச் 9ம் தேதி நிலவரப்படி நாடு முழுவது 3,038 பேர் H3N2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 1245 பேரும், பிப்ரவரியில் 1307 பேரும் மார்ச் மாதத்தில்(9ம் தேதி நிலவரப்படி) 486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், “இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன; ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம், மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலம். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எச் 3 என் 2 வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 16 (வியாழன்) முதல் மார்ச் 26 (ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

மார்ச் 11 நிலவரப்படி, புதுச்சேரியில் வைரஸ் H3N2 துணை வகையைச் சேர்ந்த 79 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் யூனியன் பிரதேசத்தில் H3N2 தொடர்பான இறப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!