குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
X

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார்

182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.கவிற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க ஒரு அணியாக செயல்பட்டது. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!