விமானம் பராமரிப்பு - சீரமைப்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைப்பு

விமானம் பராமரிப்பு - சீரமைப்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைப்பு
X

விமானங்கள் உள்நாட்டிலேயே பராமரித்தல், பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (ஜெனரல் – ஓய்வு) வி கே சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், கொவிட்டுக்கு முந்தைய நிதியாண்டான 2019-20 விமானப்பயணம் மேற்கொண்டவர்களில் சராசரி தினந்தோறும் சுமார் நான்கு லட்சமாக இருந்ததாக கூறியுள்ளார். 6 மார்ச் 2022, நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 3.7 லட்சம் பயணிகள், உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தினசரி விமானப்பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கொவிட் பாதிப்புக்கு முந்தைய நிலையைவிட அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரித்துவரும் விமானப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5%ஆக குறைந்துள்ளதாகவும் ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story