5% ஜிஎஸ்டி வரியை 3% மற்றும் 8% என மாற்ற முடிவு

5% ஜிஎஸ்டி வரியை 3% மற்றும் 8% என மாற்ற முடிவு
X
சில பொருட்களை 3 சதவீதமாகவும், மீதமுள்ளவற்றை 8 சதவீதமாகவும் மாற்றி 5 சதவீத ஸ்லாப்பை முடிவுக்கு கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் சில பொருட்களுக்கு 3 சதவீதம் மற்றும் மீதமுள்ளவை 8 சதவீதம் என மாற்றம் செய்து 5 சதவீத ஸ்லாப்பை நீக்கும் திட்டத்தை பரிசீலிக்க வாய்ப்புள்ளது. என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, ஜிஎஸ்டி என்பது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற நான்கு அடுக்கு கட்டமைப்பாக உள்ளது. தவிர, தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

வருவாயை பெருக்கும் பொருட்டு, சில உணவு அல்லாத பொருட்களை 3 சதவீத அடுக்குக்கு ஸ்லாப்க்குள் கொண்டு வருவதன் மூலம் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை நீக்க கவுன்சில் முடிவு செய்யலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

5 சதவீத அளவை 7 அல்லது 8 அல்லது 9 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு மேற்கொள்ளும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!