மத்திய அமைச்சரவையில் அதிரடி: கிரண் ரிஜிஜு மாற்றம்

கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக பதவியேற்பு
கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை சட்ட அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தில், ரிஜிஜுவிற்குப் பதிலாக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார், அவருக்கு ஏற்கனவே உள்ள இலாகாக்களுடன் கூடுதலாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
கிரண் ரிஜிஜு இப்போது புவி அறிவியல் அமைச்சகத்தின் போர்ட்ஃபோலியோவைக் கையாளுவார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புவி அறிவியல் அமைச்சகத்தை வகித்து வந்தார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை மறு ஒதுக்கீடு செய்துள்ளார். புவி அறிவியல் அமைச்சகத்தின் போர்ட்ஃபோலியோ ஸ்ரீ கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்படும் என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ரிஜிஜூ நீக்கப்பட்டதற்கு சிவசேனா மத்திய அரசை கிண்டல் செய்து, பெயர் எதையும் குறிப்பிடாமல் சிவசேனா (யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி இன்று ட்விட்டரில், "மகாராஷ்டிரா தீர்ப்பின் அவமானம் காரணமா? அல்லது மோதானி-செபி விசாரணையா?" என பதிவிட்டுள்ளார்
காங்கிரஸின் அல்கா லம்பாவும் "மத்திய அரசு தனது இமேஜைப் பாதுகாக்க ரிஜிஜூவை நீக்கியது" என்று ட்விட்டரில்கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu