புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க அரசு உத்தரவு

புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க அரசு உத்தரவு
X

பைல் படம்.

ஆதார் எண்ணுடன் அரசுத் துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை போல புதுச்சேரியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டு மின் இணைப்புகள் மற்றும் ஒரு விளக்கு திட்டம், விவசாய இணைப்புகள் என அனைத்து விதமான மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பயனாளிகளின் சேவையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் அரசுத் துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி அல்லது தபால் நிலைய பாஸ்புக், 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் இணைப்புக்காக மக்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் என புதுச்சேரி மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture