இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே நியமனம்
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, ராணுவத்தின் துணைத் தளபதி லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் சி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 மதியம் முதல் தலைமைத் தளபதியாக இருப்பார். மனோஜ் சி பாண்டே 1982 டிசம்பர் 24 ஆம் தேதி ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் இணைந்தார். தனது 39 வருட பணி அனுபவத்தில், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மேலும், அந்தமான் நிகோபார் தீவுகள் ராணுவக் கமாண்டர் ஆகவும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு பிராந்திய ராணுவத் தலைமையகத்தின் தலைமைக் கமாண்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு கல்லூரி, கேம்பெர்லி (இங்கிலாந்து) ராணுவக் கல்லூரி, மெள ராணுவப் போர் கல்லூரி மற்றும் புதுடில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயின்றுள்ளார். தனது வீர தீர செயல்களால், பரம் விஷிஷ்த் சேவா பதக்கம், அதி விஷிஷ்த் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்த் சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu