கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்
X
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி சசிதரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் ஜூன் 29 ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தித் தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகி இதுதொடர்பாக கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர். இதற்கு முன்பாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக்குழு முன்பு டுவிட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகி கருத்துக்களைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!