ஆண்டவனே நம்ம பக்கம்: சிபிஐ சோதனை குறித்து கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கும் சிபிஐ குழு சோதனை நடத்த வந்தது. முன்னதாக, ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கையில் "முறைகேடுகள்" இருப்பதாக விசாரணை அறிக்கை கூறியதை அடுத்து, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா சிபிஐ விசாரணையை நாடினார்.
இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், சிசோடியா மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பல பொய் வழக்குகள் உள்ளன. நமக்கு முன்னால் பல தடைகள் இருந்தாலும், நாம் வேலையைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்காது. எங்களை தொந்தரவு செய்ய சிபிஐக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு உள்ளது. இது முதல் ரெய்டு அல்ல. கடந்த ஏழு ஆண்டுகளில், மணீஷ் சிசோடியா மீது பல சோதனைகள் நடத்தப்பட்டன. அவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீதும், கைலாஷ் கெலாட் மீதும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்
மணீஷ் சிசோடியா வீட்டில் கலால் கொள்கை தொடர்பான ஆவணங்களை சிபிஐ தேடி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சிசோடியா வீட்டில் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இன்னும் சில மணி நேரம் சோதனை தொடரும்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி தொடர்பான விசாரணையை அமலாக்க இயக்குனரகம் தொடங்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த எப்ஐஆரில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 4 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் எப்போதும் சந்தேகம் எழுப்பி வருகிறது. இந்த சோதனை குறித்து காங்கிரஸ் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சி பணம் சம்பாதித்து, காங்கிரஸை சேதப்படுத்தி, பாஜகவை ஆதரிக்கிறது. இப்போது ஆம் ஆத்மி தேவையில்லை என பாஜக உணர்ந்திருக்கலாம், எனவே ஆம் ஆத்மியின் அனைத்து பாவங்களும் வெளியே வரும். பாஜக அவர்களுடன் ஒப்பந்தம் போடுகிறதா அல்லது நியாயம் செய்கிறதா என்று பார்ப்போம் என கூறியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu