ஆபரேஷன் விஜய்-கோவா தனி மாநிலமாக உருமாறி, 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன

ஆபரேஷன் விஜய்-கோவா தனி மாநிலமாக உருமாறி, 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன
X
1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது.

1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.கொங்கனி, மராத்தி, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இந்துக்களும், அதற்கடுத்தாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், கணிசமாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். பனாஜி இம்மாநிலத் தலைநகரம். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இது போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. வெறும் 36 மணி நேரத்தில், 30 வீரர்கள் உயிரிழப்புடன் இந்தியாவிடம் சரணடைந்தது போர்த்துக்கீசியப்படை.

இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும்.இந்திய இராணுவத்தின், இந்தப் படை நடவடிக்கை 'ஆபரேஷன் விஜய்'என்கிற பெயரில் மேற்கொள்ளப்பட்டது.

இது இந்தப் பெயரில் நடைபெறும் இரண்டாவது ராணுவ நடவடிக்கை. இதற்கு முன்பாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக, இந்தப் பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவா, 1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. இன்றோடு கோவா மாநிலமாக உருமாறி, 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்