விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
X

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் தருணத்தில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் தருணத்தில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், "விநாயகர் சதுர்த்தி என்ற நன்னாளில் இந்தியாவில் வசிக்கும் சக குடி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிவு, வளம், நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்கும் பகவான் விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் இந்தப் பண்டிகை மிகுந்த வேட்கை மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த வருடம், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டங்கள் வெற்றி பெறவும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படவும் பகவான் விநாயகரை பிரார்த்தனை செய்வோம்.

உற்சாகம் மற்றும் நல்லிணக்க சூழலியலில், கோவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றி இந்தப் பண்டிகையை நாம் கொண்டாடுவோம்", என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
ai and the future of education