ஜி20 மாநாடு தொடங்கியது: பாரத் மண்டபத்திற்கு தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி

ஜி20 மாநாடு தொடங்கியது: பாரத் மண்டபத்திற்கு தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
X

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி 

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் இரண்டு நாள் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சென்றடைந்தார்.

அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், செப்டம்பர் 11ஆம் தேதி வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார், செப்டம்பர் 9-10 தேதிகளில் இந்தியத் தலைமையகத்தில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் இந்தியா வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவுடன் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலகத் தலைவர்கள் G20 உச்சிமாநாட்டிற்காக டெல்லி வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வருகைக்குப் பிறகு அதிபர் பிடன் அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோடி இன்று பாரத் மண்டபத்தில் தலைவர்களுக்கு "மதிய விருந்து" வழங்குவார், மேலும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்.

G20 தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் G20 கூட்டங்கள் "கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த சந்திப்புகள் "நிச்சயமாக நமது நாட்டிற்கும் குடிமக்களுக்கும் பொருளாதார நன்மைகளை கொண்டு வரும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, எகிப்து அதிபர் அப்துல் பத்ஹா எல் சிசி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோம், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யன், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடி, நைஜீரிய அதிபர் பொலா அகமது தினுபு, அர்ஜெண்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸ், கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பெனிஸ், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவி உர்சுலா வென் வெ லியன், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் சார்லஸ் மைகில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.

இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பிமுஷி கிஷிடா, தென்கொரிய அதிபர் யோன் சுக் யெலோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமப்சொ, துருக்கி அதிபர் எர்டோகன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரேசில் அதிபர் லிசி இனசியோ, சீன பிரதமர் லி குவான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.


ஜி20 உச்சிமாநாடு தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் முன்பும் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி இருக்கை முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளது

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா