செயற்கை இரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம்: மத்திய அரசு வழங்கிய நிதி
இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய உள்நாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக, பாரம்பர்ய விவசாய மேம்பட்டுத் திட்டத்தின் துணை திட்டமாக பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதியை 2020-21-ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது.
எந்த விதமான செயற்கை இரசாயன உள்ளீடுகளையும் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட முறைகளை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாத காரணத்தால் இயற்கை விவசாயத்தின் செலவுகள் குறைந்துள்ளன. பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ் குழுக்கள் உருவாக்கம், திறன் வளர்த்தல், தொடர் வழிகாட்டுதல், சான்றிதழ் வழங்கல்ஆகியாவற்றுடன் ஆய்வுக்காக ஒரு ஹெக்டேருக்கு மூன்று வருடங்களுக்கு ரூபாய் 12200 வழங்கப்படுகிறது. பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2000 ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன. ரூபாய் 31.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu