மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு
X

பிரதமர் மோடி 

அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. அன்னயோஜனா திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுதொடர்பாக சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது அவர் கூறியதாவது:-

80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம்.

தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும், சூதாட்ட செயலி ஊழலில் சிக்கியிருக்கும் சத்தீஸ்கர் முதல்வரையும் கடுமையாக சாடினார்.

Tags

Next Story