ஏழை குடும்பங்களுக்கு 2 மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏழை குடும்பங்களுக்கு 2 மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
X
பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ் 2 மாத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டப்படி சுமார் 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!