பிரதமருடன் தேவகவுடா பேச்சு: மஜதவுக்கு எத்தனை தொகுதிகள்?....

பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா (கோப்பு படம்)
Former PM Met Narendra Modi
இந்தியாவில் வரும் 2024 ம் ஆண்டு லோக்சபாவிற்கான பொதுத்தேர்தலானது நடக்க உள்ளது. இருமுறை தொடர்ந்து பதவி வகித்து வரும் பிரதமர் நரேந்திரமோடி 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற பல ஆயத்த ஏற்பாடுகளை பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் பதவி வகித்தாலும் பிரதான எதிர்க்கட்சியாக திகழ்ந்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பாஜ கூட்டணியில் இணைந்துள்ளார். இதனையடுத்து லோக்சபா தொகுதிகள் எத்தனை பாஜ வழங்கும் என்பது குறித்த பேச்சு வார்த்தைக்காக டெல்லி சென்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Former PM Met Narendra Modi
முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா மற்றும் அவரது மகன்கள் கூட்டணி பங்கீடு குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினர். (கோப்பு படம்)
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சில நாட்களுக்கு முன்னர் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியானது இணைந்தது. லோக்சபா தேர்தலில் இருகட்சிகளும் இணைந்து கர்நாடக மாநிலத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டநிலையில்தான் இந்த பேச்சு வார்த்தையானது நடந்தது.
ஆனால் இதுநாள் வரை தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமுடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் இந்த ஆலோசனையானது நேற்று நடந்தது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மூத்த மகனும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா, தேவகவுடாவின் பேரனும் எம்பியுமான பிரஜ்வல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தின் தும்கூரு, மாண்டியா, சிக்கபல்லாப்பூர், ஹாசன், கோலார், உட்பட 7 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், நான்கு தொகுதிகள் ஒதுக்குவதற்கு பிரதமர் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையானது அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. கர்நாடக மாநில அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார். காங்கிரஸ் அரசின் தோல்விகள், பாஜவின் உட்கட்சிப்பூசல் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியதாவது,
லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. இருந்த போதிலும் மக்கள் சேவை ஆற்ற விரும்புவதாகவும் எனது மகன் நிகில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 28 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என தெரிவித்தார். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu