கனடா-இந்தியா இடையே விமான சேவை செப்டம்பர் 21 வரை ரத்து

கனடா-இந்தியா இடையே விமான சேவை செப்டம்பர் 21 வரை ரத்து
இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது இந்தியபயணிகள் விமானங்கள் கனடா வருவதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story