சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா நதியின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
X

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு 

சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதால், டீஸ்டாவில் நீர் மட்டம் திடீரென அதிகரித்தது. சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமாகி, கீழ்நிலையில் 15-20 அடி உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்தது.

சிங்டம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திடீர் வெள்ளம் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள பல இராணுவ நிறுவனங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

டீஸ்டா ஆற்றின் மீது இருந்த சிங்தாம் கால்வாய்ப் பாலம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் இடிந்து விழுந்தது. மேற்கு வங்கத்தை சிக்கிமுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10ன் பல பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. திடீர் வெள்ளம் காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டன அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு, டீஸ்டா நதியிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், வட சிக்கிம் மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாக பேரழிவுகரமான திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக பெகாங் பகுதியில் வெள்ளம் கடுமையாக இருந்தது, இது NH10 முழுவதுமாக மூடப்படுவதற்கு வழிவகுத்தது மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள உள்கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. கடுமையான மழையின் காரணமாக அருகிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், லாச்சென் மற்றும் லாச்சுங் போன்ற பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

Updated On: 5 Oct 2023 4:24 AM GMT

Related News