1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மீன்வளத் துறை ஒப்புதல்

1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மீன்வளத் துறை ஒப்புதல்
X

பைல் படம்

ரூ.586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களுடன் சமமான களத்தை வழங்குவதற்காகவும், 09.12.2015 அன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கைக்கு (எஸ்பிஎஃப்ஏபி) 10 ஆண்டுகளுக்கு (01.04.2016 முதல் 31.03.2016 வரை பெறப்பட்ட ஒப்பந்தங்கள்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு "ஒப்பந்த விலை" அல்லது "நியாயமான விலை" அல்லது "பெறப்பட்ட உண்மையான பரிவர்த்தனைகள்" ஆகியவற்றில் 20%க்கு சமமான நிதி உதவி குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டு முதல் 2022-23 மற்றும் நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.555.60 கோடி முதலீட்டில் பாரம்பரிய மீனவர்களுக்காக 463 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுவ மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வசதியாக, இந்திய அரசின் மீன்வளத் துறை கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மீன் வளர்ப்பிற்காக மீன் பண்ணையாளர்களுக்கு தரமான தீவனம் வழங்குவதையும், தீவனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை மீன்வளத் துறை 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 586.12 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 51.99 கோடி செலவில் 229 அலகுகளும் அடங்கும். மேலும், மீன் தீவனம் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தீவனங்கள் உட்பட ஒரு வலுவான தரமான சூழல் அமைப்பின் தேவையை உணர்ந்த மீன்வளத் துறை, இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒரு தரப்படுத்தல் பிரிவை அமைத்துள்ளது.

இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள்:

'அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் 2022' இன் முக்கிய அம்சங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.


பிரதான கால்நடை உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, மொத்த எண்ணிக்கையில் கால்நடைத் துறையின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது என்பதை இது குறிக்கிறது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இந்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு தங்கள் திட்டத்தில் உள்ள விதிகளின்படி கொள்கைகளை உருவாக்குகிறது.

ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு என்ற திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல் தொழில்நுட்பக் குழுவால் மதிப்பீடு செய்யப்படுகிறது. இக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை கூடி இத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது.

இக்குழுவின் பரிந்துரைகள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச கால்நடைப் பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு, அதன் அடுத்தடுத்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை தொழில்நுட்ப கண்காணிப்புக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோன்று, கணக்கெடுப்பு முறை மற்றும் அதை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களிலும் டி.எம்.சி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!