டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து - பரபரப்பு

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து - பரபரப்பு
X

கோப்பு படம் 

டெல்லியில், நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. எனினும், யாருக்கும் பாதிப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில், தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59வது எண் அறையில், இன்று காலை எட்டு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைந்தனர்.

தீ விபத்தின் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், எந்த பாதிப்பு இல்லை என்று, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!