பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மத்திய பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் NDA அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு அளவிலான பட்ஜெட்டாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்யப்படும்.
Live Updates
- 1 Feb 2023 9:46 AM IST
வருமானவரி விலக்கு வரம்பை அரசாங்கம் உயர்த்த வாய்ப்புள்ளது. சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு மிகவும் தேவையான நிவாரணமாக, அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம்.
- 1 Feb 2023 9:43 AM IST
டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசுத்தலைவரை சந்தித்தனர். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2023 9:41 AM IST
பட்ஜெட் 2023-24 நேரலை
பட்ஜெட் செய்தி நேரலை: 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய நிதியமைச்சகத்திற்கு வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu