தினமும் குடித்துவிட்டு தாயை அடிக்கும் தந்தை: போலீசில் புகாரளித்த சிறுவன்

பைல் படம்.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி. அவருடைய மனைவி சுபாம்பி. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ரஹிம் என்ற மகன் உள்ளார். இஸ்லாம் பேட்டையில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் வேலை செய்யும் சுபாணி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதனை அவர்களுடைய மகன் ரஹீமால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முயன்ற ரஹீம், அதே ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, எஸ்.ஐயிடம் வாய்மொழியாக புகார் அளித்தான். அந்த புகாரில் என்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து, என் அம்மாவை அடித்து துன்புறுத்துகிறார். அடிக்க வேண்டாம் என்று என் தாய் கெஞ்சி கேட்டாலும் என் தந்தை அவரை விடுவதில்லை. எனவே என் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ட் சிறுவன் கூறியிருந்தான்.
சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.ஐ, உடனடியாக ரஹீம் வீட்டிற்கு சென்று அவருடைய தாய்,தந்தை இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறியதோடு, சுபானியை கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu