பஞ்சாப்பை அடுத்து குஜராத்தை குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தில் தற்போது முதல்வர் புபேந்தர் படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் தடம் பதிக்க விரும்புகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்ததால், குஜராத்திலும் மக்களின் ஆதரவை பெற்று விடலாம் என ஆம் ஆத்மி கணக்கு போடுகிறது.
எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி குஜராத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான், குஜராத்தில் பருச் மாவட்டத்தில் உள்ள சந்தேரியா கிராமத்தில் பழங்குடியினர் கூட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சென்று இருந்தார்.
இந்நிலையில் மே 11ம் தேதியன்று குஜராத் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்கோட்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu