டிராய் ஆலோசனை அறிக்கை மீதான மாற்றுக் கருத்துகளைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு
ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மறுஆய்வு செய்தல் குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான மாற்றுக் கருத்துகளைப் பெற கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023, ஆகஸ்ட் 08 அன்று ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் மறுஆய்வு குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 05 செப்டம்பர் 2023 ஆகவும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 19 செப்டம்பர் 2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அவ்வப்போது கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே10 அக்டோபர் 2023 மற்றும் 25 அக்டோபர் 2023 வரைநீட்டிக்கப்பட்டது .
மேற்குறிப்பிட்ட ஆலோசனைப் பத்திரத்தில் மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2023 நவம்பர் 1 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாது.
மாற்றுக்கருத்துகளை மின்னணு வடிவில் advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவல்களுக்கு, டிராய் சிஎஸ்ஆர் தலைமை இயக்குநர் மற்றும் ஆலோசகர் (பி & சிஎஸ்) திரு அனில் குமார் பரத்வாஜை +91-11-23237922 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu