/* */

மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு

மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு: பிரதமருக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி நன்றி

HIGHLIGHTS

மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
X

பிரதமர் நரேந்திரமோடி

165 மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய சுரங்கங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி நன்றி தெரிவித்துள்ளார்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2015-இன் வாயிலாக சுரங்கங்களால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கனிம அறக்கட்டளையை உருவாக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு வகுத்துள்ள வழியில், சுரங்கங்கள் சம்பந்தமான பணிகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளின் நலனிற்காக செயல்படுவதே மாவட்ட கனிம அறக்கட்டளையின் நோக்கம் ஆகும்.‌

இதுவரை 22 மாநிலங்களைச் சேர்ந்த 600 மாவட்டங்களில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ஜோஷி நன்றி தெரிவித்தார். இது சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சகம் (வருவாய் துறை) (நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம்) நேற்று அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்டது. மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அறிவிப்பது சம்பந்தமாக சுரங்கங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Sep 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?