தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர் மோடி!

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் பரப்பி வருவதாகவும், தேர்தல்களில் கருப்பு பணப் புழக்கத்தை தடுப்பதே தேர்தல் பத்திரத்தின் நோக்கம் என்றும் அது தொடர்பாக குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிவதாக பிரதமர் கூறினார்.
பிரபல நியூஸ் ஏஜென்சியான ஏஎன்ஐ-க்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பிறகு 16 நிறுவனங்கள் தேர்தல் நன்கொடைகள் வழங்கி இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பிறகு நன்கொடை அளித்த நிறுவனங்களின் மொத்த தொகையில் 37 சதவீத மட்டுமே பாஜக பெற்று உள்ளது. மீதமுள்ள 63 சதவீத நன்கொடையை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளன.
தேர்தல்களில் நாடு கருப்பு பணத்தை நோக்கி தள்ளப்படுகிறது. அதற்கு அனைவரும் வருந்துவர். தேர்தல்களில் கருப்புப் பணத்தின் புழக்கம் ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் என்ற விவாதம் நீண்ட நாட்களாக நாட்டில் இருந்து வருகிறது.
தேர்தலில் பணம் செலவிடப்படுகிறது அதை யாரும் மறுக்க முடியாது, பாஜகவிலும் தேர்தலுக்கு செலவு செய்யப்படுகிறது. அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தலில் செலவு செய்யும் நிலையில் இந்த கருப்புப் பணத்தில் இருந்து தேர்தல்களை எப்படி விடுவிக்க முடியும், எப்படி வெளிப்படைத்தன்மை கொண்டு வர முடியும் என்பதன் விளைவே தேர்தல் பத்திர சட்டத்தில் திருத்த கொண்டு வர காரணியாக மாறியதாக தெரிவித்தார்.
தேர்தல் பத்திரம் தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சியினர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய அரசு முடிவு எடுத்தது. தேர்தலில் அதிகளவில் ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழங்கும் நிலையில், கருப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. முன்னர் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பணம் வழங்க முடியும் என்று இருந்த நிலையை, 2 ஆயிரத்து 500 ரூபாயாக குறைத்ததாக தெரிவித்தார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, 3 ஆயிரம் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிலையில், அதில் 26 நிறுவனங்களே அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டன. மேலும், 26 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் மட்டும் புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கு பிறகு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கி உள்ளன. அந்த 16 நிறுவனங்கள் வழங்கிய தொகையில் 37 சதவீதம் மட்டுமே பாஜக பெற்ற நிலையில், மீதமுள்ள 67 சதவீத நிதியை எதிர்க்கட்சிகள் பெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu