விமானம் தாமதமானதால் ரத்தான நிச்சயதார்த்தம்

விமானம் தாமதமானதால் ரத்தான நிச்சயதார்த்தம்
X

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் 30 மணி நேரம் தாமதமாக வந்ததால் 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வெகுநேரம் ஆகியும் விமானம் கிளம்புவதற்கான அறிகுறி தென்படாததால், பயணிகள் எதிர்ப்பு தெரவித்தனர். இதையடுத்து அந்த விமானதத்தில் பயணிக்க இருந்த அனைத்து பயணிகளும் அங்கிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்த விமானம் திங்கட்கிழமை 2.45 மணிக்கு தான் துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது. சுமார் 30 மணி நேர தாமத்திற்கு பிறகு அந்த விமானம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்தது. இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பலர் தாங்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விமானம் தாமதமாக இயக்கப்பட்டதால் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

அந்த பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்ததம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக அந்த பயணிகள் முன்கூட்டியே விமானத்தில் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள. ஆனால் துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் திங்கட்கிழமையே புறப்பட்ட காரணத்தால், அவர்கள் திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடந்த தினத்தில் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களது நிச்சயதார்த்தம் அன்றைய தினம் நடக்கவில்லை. வேறொரு நல்ல நாளில் அவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த, அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கக்கூடிய ஏர் இந்தியா விமானம் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுவதாகவும், விமானம் தாமதமாகும் பட்சத்தில் அதுபற்றி உடனடியாக பதிலளிப்பதில்லை எனவும், டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்தால் ஒரு வாரத்திற்கு பிறகுதான் பணம் திரும்ப கிடைக்கிறது என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!