ரயில் விபத்துக்கு காரணம் எலக்ட்ரானிக் இன்டர்லாக்: ரயில்வே அமைச்சர்
சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பாலசோர் ரயில் விபத்திற்கு காரணம் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரயில்கள் மோதி பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உடனடியாக மீட்புப்பணிகள் முடிக்கவிடப்பட்டது. இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் இராணுவம் களமிறங்கியது.
இந்த கோர விபத்து நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரயில் பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்கும் பணி முடிவடைந்து, தற்போது ரயில் பெட்டிகளை அகற்றி சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரயில்வே அமைச்சர் இன்றும் அங்கு முகாமிட்டு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஒடிசாவின் பாலசோரில் நடந்த கோர ரயில் விபத்து எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் .
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்பது சிக்னல் கருவியாகும். இது தண்டவாளங்களின் மூலம் ரயில்களுக்கு இடையில் முரண்பட்ட இயக்கங்களைத் தடுக்கிறது. சிக்னல்கள் முறையற்ற வரிசையில் மாற்றப்படுவதைத் தடுக்க இது அடிப்படையில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். இந்த அமைப்பின் நோக்கம், பாதை பாதுகாப்பானது என நிரூபிக்கப்படாத வரை எந்த ரயிலுக்கும் சிக்னல் கிடைக்காது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ், எலக்ட்ரானிக் இன்டர்லாக் செய்யும் போது ஏற்பட்ட மாற்றத்தால்தான் விபத்து நடைபெற்றுள்ளது. யார் செய்தார்கள், எப்படி நடந்தது என்பது முறையான விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விஷயத்தை விசாரிப்பதற்கு முன், அதுபற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. விசாரணை அறிக்கை வரட்டும். ஆனால் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு, அதற்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இப்போது எங்கள் கவனம் மறுசீரமைப்பில் உள்ளது. புதன்கிழமை காலை இலக்குக்கு முன்பாக மறுசீரமைப்பை நிச்சயமாக முடிப்போம். பின்னர் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் கூறினார்.
மேலும், கவாச் (மோதல் எதிர்ப்பு) கருவி மூலம் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டையும் ரயில்வே அமைச்சர் மறுத்தார். கவச்சுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu