/* */

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு
X

நாடாளுமன்ற ராஜ்ய சபா (கோப்பு படம்).

நமது நாட்டில் உள்ள 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

18வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாகவும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்ற மேல் சபை என்று அழைக்கப்படும் ராஜ்ய சபா தேர்தல் இந்தியா முழுவதும் காலியாகும் 56 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா தொகுதிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இன்று (திங்கட்கிழமை) அறிவித்து உள்ளது.

13 மாநிலங்களைச் சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, மேலும் இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மீதமுள்ள 6 உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 இடங்களுக்கும் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இடங்களுக்கும், பீகார் மாநிலத்தில் 6 இடங்களுக்கும் மேற்கு வங்கம் மாநிலத்தில் 6 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 5 இடங்களுக்கும், குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா 4இடங்களுக்கும் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு ராஜ்ய சபா இடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ராஜ்யசபா தேர்தல் 2024 அட்டவணை

பிப்ரவரி 8ம் தேதி அறிவிப்பு வெளியீடு

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15

வேட்புமனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 16

வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 20

தேர்தல் தேதி பிப்ரவரி 27

வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பிப்ரவரி 27 மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

பிப்ரவரி 29-ம் தேதி தேர்தல் முடிவடையும் தேதி

ராஜ்யசபா உறுப்பினருக்கான பதவிக் காலம் ஆறு ஆண்டுகள்.

நிரந்தர அமைப்பான ராஜ்யசபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுகின்றனர். இது வீட்டின் செயல்பாட்டில் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள், மாநில சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு மாற்றத்தக்க வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வாக்களிக்கும் செயல்முறை

வாக்களிக்கும் செயல்பாட்டில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் வாக்குச் சீட்டிலும் எத்தனை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவ்வளவு விருப்பங்கள் உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக தங்கள் விருப்பங்களை குறி வைத்து வாக்களிக்கின்றனர். ஒரு வேட்பாளர் முதல் சுற்றில் தேவையான வாக்குகளை பெற்றால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

இல்லையெனில், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிடும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களின் வாக்குகள் மீதமுள்ள வேட்பாளர்களுக்கு மாற்றப்படும். அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் வரை இந்த செயல்முறை தொடரும்.

இந்த ராஜ்ய சபா தேர்தலிலும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Updated On: 30 Jan 2024 6:10 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  4. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  6. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  9. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  10. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!