குடியரசுத் தலைவர் தேர்தல் 2022 ஜூலை 18 அன்று நடைபெறவுள்ளது
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு ஜூலை 18, 2022 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நடைபெறும்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்ததாவது: அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் தேர்தல் அதிகாரியாக இருப்பார்
வேட்புமனுக்கள் புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும், மேலும் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் முன்மொழிபவர்களாகவும் மேலும் 50 பேர் இரண்டாம் நிலை உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உறுப்பினர்களின் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் இருப்பதால் பட்டியல் புதுப்பிக்கப்படும்.
தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள்
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தேதி - ஜூலை 18ஆம் தேதி
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - ஜூலை 21ஆம் தேதி
வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜூன் 15ஆம் தேதி
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - ஜூன் 29ஆம் தேதி
வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி தேதி - ஜூலை 2ஆம் தேதி
இம்முறை, 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு எந்த உத்தரவையும் வழங்க முடியாது என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu