உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்
X
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நில அதிர்வு உண்டரப்பட்டது. இதனால், பாதிப்பு குறித்து தகவல் இல்லை.

இன்று அதிகாலை 5:05 மணியளவில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில், 4.1 ஆக பதிவாகி உள்ளதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கின. எனினும், நில அதிர்வால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல் இல்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!