மணிப்பூரை இன்று அதிர வைத்த நிலநடுக்கம்: 4.4 ரிக்டராக பதிவு
X
By - B.Gowri, Sub-Editor |8 Nov 2021 9:03 AM IST
மணிப்பூரில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை.
வடகிழக்கு மாநிலங்களில் சில நாட்களாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனிடையே மணிப்பூரில் இன்று காலை, மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று காலை 7.45 மணியளவில், ரிக்டர் அளவில் 4.4- ஆக, இந்த நிலநடுக்கம் பதிவானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, மணிப்பூரின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. எனினும், இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் இல்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu