நாயா உழைப்பவரை பாத்திருப்போம், நாய் போல் குரைத்து சாதித்தவரை கேள்விப்பட்டுள்ளீர்களா?

நாயா உழைப்பவரை பாத்திருப்போம், நாய் போல் குரைத்து சாதித்தவரை கேள்விப்பட்டுள்ளீர்களா?
X

அதிகாரியிடம் நாய் போல் குரைக்கும் ஸ்ரீகாந்தி தத்தா

தனது ரேஷன் கார்டில் ஸ்ரீகாந்தி குமார் "குத்தா" என்று தவறாக அச்சிடப்பட்டதால், அதிகாரிக்கு எதிராக நாய் போல குரைத்தது வைரலானது

ஸ்ரீகாந்தி குமார் தத்தா என்பவரின் பெயர் , ஒரு முறை அல்ல, மூன்று முறை தனது ரேஷன் கார்டில் ஸ்ரீகாந்தி குமார் "குத்தா" என்று தவறாக அச்சிடப்பட்டதால், அதிகாரிக்கு எதிராக நாய் குரைத்தது வைரலானது. தற்போது ரேஷன் கார்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வங்காளத்தின் பாங்குராவில் இருந்து ஒரு வீடியோ வைரலானது. வீடியோவில், ஒரு நபர் தனது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாய் போல் குரைப்பதைக் காண முடிந்தது.

ஸ்ரீகாந்தி குமார் தத்தா தனது பெயரைத் திருத்தக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் புதுவிதமான போராட்டத்தை முன்னெடுத்தார். ஸ்ரீகாந்தி குமார் தத்தா, ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்று தவறாக அச்சிடப்பட்டது. குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள்.

முந்தைய இரண்டு முறையும் அவரது பெயர் தவறாக அச்சிடப்பட்டதால் அவர் மூன்றாவது முறையாக திருத்தத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய நான் மூன்று முறை விண்ணப்பித்தேன். மூன்றாவது முறையாக எனது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதிலாக ஸ்ரீகாந்தி குத்தா என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்" என்று ஸ்ரீகாந்தி கூறினார்

நேற்று, நான் மீண்டும் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றேன், அங்குள்ள மாவட்ட அலுவலரை (பி.டி.ஓ.) பார்த்ததும், அவர் முன் நான் நாய் போல் நடிக்க ஆரம்பித்தேன். என் கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் ஓடிவிட்டார். எத்தனை முறை எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறீர்களா?"என்று ஸ்ரீகாந்தி கூறினார்

ஸ்ரீகாந்தி குமாரின் வித்தியாசமான அனுகுமுறையால் குழப்பம் அடைந்த அதிகாரி அந்த மனுவை வாங்கி விவரத்தை கேட்டார். அப்போது, தான் ஸ்ரீகாந்தி குமார் தத்தாவின் பெயர் ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பெயர் மாற்றப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார். இதனால், ஸ்ரீகாந்தி தனது போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில், ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்று ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருந்த பிழை தற்போது திருத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையில் 'குத்தா' என்று தவறாக இருந்த பதிவு மாற்றப்பட்டு 'தத்தா' என்று திருத்தப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீகாந்தி குமார் தத்தா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்