சபரிமலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு சோதனை
ஆளில்லா விமானத்தை இயக்கி சோதனை செய்த போது எடுத்த படம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
இந்த காலக்கட்டதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை. இங்கு சுவாமி பிரம்மச்சாரியாக இருந்து விரதம் மேற்கொள்வதால் இந்த கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள் அனுமதிப்பது குறித்து சர்ச்சை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிப்பதில்லை என தேவேசம் போர்டு அறிவித்தது.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேவசம் போடும் மற்றும் கேரள மாநில காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களை தீவிர சோதனை மேற்கொண்ட பிறகு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர்.
சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் கண்காணிப்பு நடத்தப்பட்டன. பம்பா, நிலக்கல், பாண்டித்தாவளம் சன்னிதான வளாகங்களில் ஆளில்லா விமானம் மூலம் கேரளா காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாண்டிததாவளத்தில் இருந்து ஆளில்லா விமானம் புறப்பட்டு வனப்பகுதிகளை கேமராவில் படம் பிடித்தது. இது 120 மீட்டர் உயரத்தில் பறந்து 900 மீட்டர் தூரம் வரையிலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சன்னிதானம் தனி அலுவலர் கே.ஹரிச்சந்திர நாயக் : வனப்பகுதிகள் உட்பட, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளனவா என, வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சன்னிதானத்திற்கு வெளியே உள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.
மேலும் இங்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்து எந்த ஒரு கவலையும் ஏற்பட்டுவிடக்கூடாது. பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu