பெண்களை பார்த்ததும் பஸ்களை நிறுத்தாத டிரைவர்கள்: கெஜ்ரிவால் அதிரடி

பெண் பயணிகளை பார்த்தும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்
தில்லி அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் காரணமாக டிடிசி பொது பேருந்து ஓட்டுநர்கள் பெண் பயணிகளுக்கு பேருந்துகளை நிறுத்தவில்லை என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். .
இது குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “பெண்களின் பயணம் இலவசம் என்பதால் சில ஓட்டுநர்கள் பெண் பயணிகளைக் கண்டால் பேருந்துகளை நிறுத்துவதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த பேருந்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளார்
கெஜ்ரிவாலின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலோட், பேருந்து ஓட்டுநர் மாற்றப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பேருந்தின் ஓட்டுநர் மாற்றப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் மற்றும் பிற ஊழியர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கெலோட் ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறுகையில், “பயணிகள் எங்கும் இதுபோன்ற முறைகேடுகளைக் கண்டால், அவர்கள் உடனடியாக அதை வீடியோ எடுத்து பகிர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி கர்நாடகாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu