தண்டவாளத்தை யானை கடப்பதைக் கண்டு ரயிலை நிறுத்திய டிரைவர்: வீடியோ வைரல்
யானை தண்டவாளத்தை கடப்பதை கண்டு ரயிலின் வேகத்தை குறைத்த டிரைவர்
வடகிழக்கு ரயில்வேயை சேர்ந்த அலிபுர்துார் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் டிரைவர்கள், காட்டுப்பகுதியில் இருந்த யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க வருவதை கவனித்தனர்.
இதை தூரத்தில் இருந்தபோதே பார்த்த அவர்கள் உடனடியாக யானைக்கு வழிவிடும் விதமாக பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை குறைத்துள்ளனர். இதனால் யானையும் எந்த தடங்கலும் இன்றி தண்டவாளத்தை கடந்து சென்றது.
இந்த சம்பவம் ரயிலில் இருந்தவாறே கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விடியோவானது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே 1000-க்கும் மேற்பட்ட பார்வையை கடந்தது. அத்துடன் பலரும் ரயில் டிரைவர்களின் செயலை பாராட்டி கருத்து பதிவிட்டு விடியோவை ஷேர் செய்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரழக்கும் சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரயில் டிரைவரின் இந்த மனிதாபிமான மிக்க செயலை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். காட்டில் இருந்து வெளியேறி தண்டவாளத்தை கடந்த யானைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாவாறு அக்கறையுடன் நடந்து கொண்ட ரயில் டிரைவரின் சமயோஜிதமான இந்த செயல் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
https://twitter.com/drm_apdj/status/1524602135127916544?s=20&t=S8r78UAdj7UdmHmdD5pIHQ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu