கோமியத்தை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோமியத்தை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பைல் படம்.

கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீரில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால் அது மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றது என நாட்டின் முன்னணி கால்நடை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுவின் சிறுநீர் பல நோய்களை குணமாக்க வல்லது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் முன்னணி கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி நிறுனவம் (IVRI), கோமியம் பற்றி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் பசுக்கள், எருமைகள், காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில் வயிற்றுவலி உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் 14 வகையான ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு செயல்பாட்டுத் தன்மையில் பசு மாட்டின் சிறுநீரைக் காட்டிலும், எருமை மாட்டின் சிறுநீர் சிறப்பானதாக உள்ளது என்றும், எனினும் எந்த சூழலிலும் மாட்டுச் சிறுநீர் மனிதர்கள் உட்கொள்ளத் தகுதியற்றது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வடிகட்டிய கோமியத்தில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இல்லை என்று கூறப்படுவது குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்திய போஜ் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story