முர்மு அல்லது சின்ஹா: யார் அடுத்த குடியரசு தலைவர்?
Presidential Election- குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை (ஜூலை 18) நாடாளுமன்ற வளாகம், மாநில சட்டப் பேரவைகளுக்குள் உள்ள 30 மையங்கள் உட்பட 31 இடங்களில் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் வேட்பாளர் யஹ்ஸ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வெற்றிகரமாக முடிந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 4,796 வாக்காளர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர்,
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்குகிறது. மாலைக்குள் முடியும் என தெரிகிறது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துவிட்ட நிலையில், நாடாளுமன்ற அறை எண் 63-ல் வாக்கு எண்ணும் பணிக்கு தேர்தல் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu