இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
X

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு

எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்துக்கும் மேல் திரௌபதி முர்மு பெற்றதால், இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் யஷ்வந்த் சின்ஹா ​​மிகவும் பின்தங்கியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


முன்னாள் மத்திய அமைச்சரும் குடியரசு தலைவர் வேட்பாளருமான யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டரில், ​​2022 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஸ்ரீமதி திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசின் 15வது குடியரசுத் தலைவராக அவர் அச்சமோ, ஆதரவோ இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராகச் செயல்படுவார் என்று இந்தியா நம்புகிறது என்று கூறியுள்ளார்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil