பிரபல தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்

கீதாஞ்சலி ஐயர்
தேசிய ஒளிபரப்பான தூர்தர்ஷனில் இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் புதன்கிழமை காலமானார்.
பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த விருது பெற்ற தொகுப்பாளர், நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் சரிந்து விழுந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கீதாஞ்சலி ஐயரின் நெருங்கிய தோழி ஒருவர் கூறுகையில், "அவருக்கு பார்கின்சன் நோய் இருந்தது, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் சரிந்து விழுந்தார்" என கூறினார்.
கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர் 1971 இல் தூர்தர்ஷனில் சேர்ந்து நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் என்ற விருதைப் பெற்றார். 1989 இல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார்.
செய்தி நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, தேசிய நாடகப் பள்ளியின் (NSD) டிப்ளமோ பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர், பல அச்சு விளம்பரங்களிலும் பிரபலமான முகமாக இருந்தார், மேலும் ஸ்ரீதர் க்ஷிர்சாகரின் தொலைக்காட்சி நாடகமான "கந்தான்"விலும் நடித்தார். அவரது பல தசாப்த கால புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் உலக வனவிலங்கு நிதியத்துடன் (WWF) தொடர்புடையவர்.
புகழ்பெற்ற ஆளுமையின் மறைவுக்கு பல பிரபலங்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் டிசோசா தனது இரங்கல் செய்தியில், கீதாஞ்சலி அய்யர் அவர்கள் நமது டிவி திரையில் வலம் வந்து, செய்தி பார்க்கும் அனுபவங்களில் அழியாத அடையாளத்தை பதித்த நாட்களை நாங்கள் அன்புடன் நினைவுகூர்கிறோம். அவரது திடீர் மறைவால் துக்கமடைந்த அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என கூறியுள்ளார்
"இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர், அன்பான மற்றும் நேர்த்தியான நபர் மற்றும் மகத்தான பெண்மணி இன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பத்திரிகையாளர் ஷீலா பட் ட்வீட் செய்துள்ளார்.
கீதாஞ்சலி ஐயருக்கு ஒரு மகன் மற்றும் மகள் பல்லவி ஐயர் உள்ளனர், அவர் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளரும் ஆவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu