ஆதார் அப்டேட் செய்ய கடைசி நாள் செப்டம்பர்- 14 மறந்திடாதீங்கோ...
ஆன்லைனில் ஆதார் அட்டை அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.14-க்குள் எவ்வித கட்டணமும் இல்லாமல் உங்கள் பழைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய ஜூன் 14 வரை UIDAI கால அவகாசம் வழங்கிய நிலையில் பயனர்களின் கோரிக்கைக்கு இணைங்க மீண்டும் 3 மாதங்கள் அவகாசத்தை நீட்டித்து அறிவித்தது. அதன்படி செப்.14-க்குள் எவ்வித கட்டணமும் இல்லாமல் உங்கள் பழைய ஆதார் அட்டையை புதுப்பி த்துக் கொள்ளலாம்.
நினைவில் கொள்ளுங்கள், ஆதாரில் திருத்தம் செய்வது என்பது வேறு, ஆதார் புதுப்பித்தல் என்பது வேறு. ஆதாரில் உங்கள் பெயர், புகைப்படம், 10 இலக்க எண், பிறந்த தேதி, முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஏதாவது மாற்றம் செய்வது என்றால் அது திருத்தம் ஆகும். ஆனால் UIDAI-யின் அறிவிப்பு இதற்கானது அல்ல.
அதாவது உங்கள் ஆதார் அட்டை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அதை தற்போதுள்ள சான்றிதழ்படி கட்டணம் ஏதும் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம்.
1)ஆன்லைனில் ஆதார் புதுப்பித்தல் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளம் சென்று Aadhaar Self Service Portal பக்கம் செல்ல வேண்டும்.
2). அங்கு உங்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா கொடுக்கவும். இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை உள்ளிடவும்.
3.) அடுத்து Document Update பக்கத்தை க்ளிக் செய்து விவரங்களை சரி பார்க்கவும்.
4.) இப்போது அதில் வரும் பட்டியலில் உங்களுக்கு தேவையான ஆவணங்களை தேர்ந்தெடுத்து அப்லோடு செய்ய வேண்டும்.
5.) அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு service request number அனுப்பபடும், அதை கொண்டு ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu