வயிற்றில் இருந்த 15 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை

வயிற்றில் இருந்த 15 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை
X

பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவ குழுவினர் 

12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு நடத்திய இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் அஷ்டா என்கிற நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் என்கிற மருத்துவமனையை அணுகி மருத்துவர்களிடம் வயிற்று வலி குறித்து கூறியுள்ளார்.

வயிறு மிகவும் வீக்கத்துடன் இருந்ததால் மருத்துவர்கள் பெண்ணுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின்னர், கருப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, பெண் மற்றும் அவரது வீட்டாரின் சம்மதத்துடன், சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பின்னர், அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.

அறுவைசிகிச்சை குழுவைச் சேர்ந்த மருத்துவர் அதுல் வியாஸ் கூறுகையில், " பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை உள்ளே சுமந்து இருந்தார். கட்டி மிகப்பெரியதாக இருந்ததால், நோயாளிக்கு உணவு சாப்பிடும் போதும், நடக்கும்போதும் சிரமம் ஏற்படும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் போது குழு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் ஆபத்தாகிவிடும். கட்டி பல நரம்புகளுடன் இணைந்திருந்ததால், மருத்துவர்கள் நுட்பமாக கையாள வேண்டியிருந்தது. பெண் இப்போது நலமாக உள்ளார்" என்றார்.

நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், இண்டெக்ஸ் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு அந்தப் பெண்ணை பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார்.

மேலும், இது மிகப்பெரிய சாதனை என்று மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா மற்றும் துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் மருத்துவர்களின் முயற்சியைப் பாராட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!