மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டுமா? முதலில் இதனை படியுங்கள்

மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டுமா? முதலில் இதனை படியுங்கள்
X
பள்ளி மாணவ மாணவிகள் (கோப்பு படம்)
மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டும் என்றால் முதலில் இதனை படித்து தான் பாருங்களேன்.

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் இடைநிற்றல் கல்வியை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு நிதி உதவி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாணவிகள் கல்லூரி மாணவிகள் படிப்பதற்காக மாதம் ரூ.1000 உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி, காலணிகள் உள்பட பல்வேறு கல்வி தொடர்பான பொருட்களையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு 9ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவி தொகை வழங்கும் திட்டம் ஒன்றை தற்போது அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்ட தேர்வினை எழுதவேண்டும். இந்த தேர்வு வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை வருகிற 27ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மாணவ செல்வங்களே உங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த அறிவிப்பு படி உதவி தொகை பெறுவதற்கு நீங்கள் தேர்வு எழுத தயாராகி விட்டீர்களா?

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்