எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?
எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின், ஒரு பங்கின் விலை ரூ.902, ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. வரும் மே 4ம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், பங்குகள் வாங்குவதில் பாலிசிதாரர்களுக்கு ரூ.60 வரையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.40 வரையிலும் தள்ளுபடி வழங்கலாம் என தெரிகிறது.
பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய உள்ள LIC நிறுவனத்தின் பங்கின் விலை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு பங்கின் விலை 902 முதல் 949 வரை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான LIC- யின் பங்குகளை விற்பனை செய்ய நாடளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து 3.5% பங்குகள் அல்லது 22 கோடியே 30 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் 21 கோடி தொகையை ஒன்றிய அரசு ஈட்ட உள்ளது. இந்த பங்குகளில் 2.20 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
பங்குகள் ஒழுங்குமுறை ஆணையமான செவி விதித்துள்ள குறைந்தபட்ச நிபந்தனையாக 5% கீழே தான் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. ரூ. 21,000 கோடி என்பது பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ஈடுபட உள்ள உச்சபட்ச தொகையாகும். மேலும், மே 4 தேதி முதல் மே 9 தேதி வரையில் பங்குகள் வாங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu