/* */

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்: நீதிபதி காட்டம்

தாஜ்மகால் அறைகளை திறக்க உத்தரவிட கோரிய மனுவில், இன்று தாஜ்மகால் அறையை திறக்க சொல்பவர், நாளை என் அறையை திறக்க சொல்வீங்களா? என நீதிபதி காட்டம்

HIGHLIGHTS

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்:  நீதிபதி காட்டம்
X

தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி அயோத்தியின் பாஜக செய்தித் தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி டி.கே உபாத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாஜ்மஹாலின் உண்மை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தொல்லியல் ஆய்வுத்துறையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பூட்டப்பட்டுள்ள அந்த அறைகளில் பல விசயங்கள் மறைந்துள்ளன. அது என்ன என்பது பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம். குறிப்பாக முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தைக்கு எழுதிய கடிதம் கூட உள்ளதாக கூறப்படுகிறது என வாதிட்டார்.

உத்தரபிரதேச அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கை தற்போது இந்த நீதிமன்றத்தில் தொடுக்க மனுதாரர்களுக்கு முகாந்திரம் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என வாதிட்டார்.

ஆனால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் நிலம் யாருடையது என்று நான் கோரவில்லை, மாறாக தாஜ்மஹாலில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவர வேண்டும். குறிப்பாக பூட்டப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும் என்பதே. அந்த கட்டுமானத்தின் வயது தொடர்பாக சந்தேகம் எழுப்பும் சில தரவுகளை இணைத்துள்ளேன் என கூறினார்.

அப்போது நீதிபதிகள், தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை எனக்கூறுகிறீர்களா? இங்கு தாஜ்மஹால் யார் கட்டியது என்று தீர்ப்பு கூறவா இன்று நீதிமன்றம் கூடியுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எந்த அடிப்படையில், எந்த உரிமையில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகினார்? என்றார்கள்.

இதற்கு மனுதாரர் தரப்பில், இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்றார்.

அதற்கு நீதிபதிகள், ஒரு விஷயம் தொடர்பான தரவுகளையே அறிய முடியும் கேட்க முடியுமே தவிர மாறாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி நடத்த வேண்டும் என எந்த சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது ? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், அதனால் தான் தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என கோருகிறேன். நமக்கு தவறான வரலாறு கற்பித்திருந்தால் அது திருத்தப்பட வேண்டும். குறிப்பாக பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

இதனால் கடுப்பான நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்தபின் ஆய்வு செய்ய கோருங்கள், அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள் என எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Updated On: 12 May 2022 3:48 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...