நீட் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக எம்பிகள் அமளி, வெளிநடப்பு

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக எம்பிகள் அமளி, வெளிநடப்பு
X

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா விவகாரத்தை மாநிலங்களைவையில் கிளப்பிய திமுக எம்.பி.க்கள், விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதாவை, ஆளுனர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இன்றும் இவ்விவகாரத்தை திமுக எம்.பி.க்கள் கிளப்பினர். மாநிலங்களவையில் இன்று, நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று, திமுக எம்.பி.க்கல் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அனுமதி மறுத்த அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, இந்த விவகாரம் குறித்து, கேள்வி நேரத்தின்போது அனுமதிக்க முடியாது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போது பேசுங்கள் என்று அறிவுறுத்தினார்.

எனினும், திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் இதனை ஏற்கவில்லை. திமுக எம்.பி.க்கள், மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். பின்னர், திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
ai marketing future