மனைவி, குழந்தைகளை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த ஆட்சியரின் மெய்காவலர்
District Collector Security Suicide
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படை காவலர் ஆக்குல நரேஷ். இவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தனக்கு கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்திற்காக பயன்படுத்தி இழந்து உள்ளார்.
அதுமட்டுமின்றி இழந்த பணத்தை மீண்டும் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடி உள்ளார். மேலும், பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஆக்குல நரேஷின் தவறை அவருடைய மனைவி சைதன்யா சுட்டிக்காட்டி கண்டித்து உள்ளார். இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆக்குல நரேஷ் இன்று திடீரென்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேராக தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று மகன் ரேவந்த், மகள் ஹேம ஸ்ரீ ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளார்.
District Collector Security Suicide
பின்னர் தன்னிடம் இருந்த சர்வீஸ் ரிவால்வர் மூலம் குழந்தைகள் இரண்டு பேரையும் சுட்டு கொலை செய்த ஆக்குல நரேஷ், பின்னர் மனைவியும் சுட்டு கொலை செய்து இருக்கிறார். அதன்பின்னர் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காவலர் ஆக்குல நரேஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி சென்று பார்த்த போது அங்கு நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் காவலர் ஆக்குல நரேஷ் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் தொடர்ந்து சீரழிந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu