குடியரசு நாள், சுதந்திர நாள் - என்ன வித்தியாசம்?
சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டுக்குமான வித்தியாசங்களை முதலில் பார்த்துவிடுவோம்
முதல் வித்தியாசம்.
ஆகஸ்டு-15, சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கப்படுகிறது.
ஜனவரி-26, குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப் படவேண்டும் இதை கொடியை பறக்கவிடுதல், அதாவது flag unfurling என்பார்கள்..
இரண்டாவது வித்தியாசம்
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் குடிமகனாக கருதப்பட்டார். குடியரசு தலைவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார். மாநிலங்களில் முதலமைச்சர் கொடியேற்றுவார்
குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் (இந்தியா குடியரசு ஆன ஆண்டு 1950) அமலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார். மாநிலங்களில் ஆளுநர் கொடியை பறக்க விடுவார்
மூன்றாம் வித்தியாசம்
சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது
குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாதையில் கொடி பறக்கவிடப்படுகிறது
முதல் குடியரசு தினம் -
ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில்,1950 ஜன.,26ம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார். பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார்.
அதிக முறை, குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்ஸ்டாநியூஸ் சார்பாக குடியரசு நாள் வாழ்த்துகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu